ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை இந்த வார பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளி ஆசிரியர்களின் வேலைநிறுத்த போரட்ட நடவடிக்கையைத் தவிர்க்கும் என்று பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் நம்புகிறார்.

நியூசிலாந்து முழுவதும் சுமார் 50,000 ஆசிரியர்கள் வியாழன் அன்று ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அரசாங்கம் சர்ச்சையை தீர்க்க கடுமையாக உழைத்து வருவதாக கூறினார்.

தொழிற்சங்கம் எழுப்பிய பிரச்சினைகளை தான் ஒப்புக்கொண்டதாகவும், உடன்படிக்கையை நோக்கி முன்னேறுவதற்கு பேச்சுவார்த்தைகளை விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தொழிற்சங்கங்கள் செவ்வாய்க்கிழமை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன.

கல்வி நடவடிக்கைகளில்
இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, தொழிற்சங்கத்துடன் கூடிய விரைவில் ஒரு உடன்பாட்டிற்கு வர அரசாங்கம் விரும்புவதாக ஹிப்கின்ஸ் கூறினார்.