பொன்னியின் செல்வனாக இருந்த ஜெயம் ரவி திடீரன சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாஸ் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியுடன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்று அங்கே பிரத்யேகமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

எங்கேயும் காதல் ஹீரோவான ஜெயம் ரவிக்கு ரொமான்ஸை சொல்லித் தரணுமா என்ன? தனது மனைவி ஆர்த்தி உடன் பயங்கர ரொமாண்டிக்காக தாஜ்மகாலில் செம க்யூட்டான உடையில் காதல் பொங்க போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் காதலில் விழச் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவியை ரொமான்டிக் மோடில் பார்த்த ரசிகர்கள் செம க்யூட் தலைவா நீங்க என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே அகிலன், இறைவன், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் என மார்ச், ஏப்ரல் என அடுத்தடுத்த மாதங்களில் ரசிகர்களுக்கு திரையில் பெரிய விருந்து கொடுக்க காத்திருக்கிறார் ஜெயம் ரவி.