நடிகர் வடிவேலுவுக்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின.

மேலும், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோருக்கும் இந்தப் பட்டமானது வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் இந்தப் பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரை அச்சிட்டிருந்தனர்.

இதனால் அண்ணா பல்கலைக்கழகம் தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக விருது பெற்றவர்கள் நம்பினர்.

ஆனால் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் போலியானது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறுகையில், வடிவேலுவுக்கும், தேவாவுக்கும் டாக்டர் பட்டத்தை நாங்கள் வழங்கவில்லை.

ஓய்வு பெற்ற நீதிபதியையும் அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் என கூறியிருக்கிறார்.