எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறைமையை நீக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போதைய எரிபொருளை ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இது குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை ஏப்ரல் மாதத்துடன் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.