நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி.

அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது.

பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார்.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.