ஆக்லாந்தின் Muriwai இல் கேப்ரியல் சூறாவளியால் உயிரிழந்த இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைப்பு மற்றும் அவசரநிலை நியூசிலாந்து சேவைகள் (FENZ) இன்று அஞ்சலி செலுத்தியது.

இரண்டு தீயணைப்பு வீரர்கள் கடந்த திங்கள்கிழமை Muriwai இல் உள்ள Motutara சாலையில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், 

இந்நிலையில் காற்று மற்றும் மழையின் போது வீடு இடிந்து விழுந்தது.

இதில் டேவ் வான் ஸ்வானன்பெர்க் என்ற தீயணைப்பு வீரர் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டதுடன் கிரேக் ஸ்டீவன்ஸ் என்ற மற்ற தீயணைப்பு வீரர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று வாசிக்கப்பட்ட அறிக்கையில், FENZ இன் தலைமை நிர்வாகி கெர்ரி கிரிகோரி, இறுதி வரை வீரத்துடன் போராடிய பின்னர், நேற்றைய தினம் இரவு அன்புக்குரியவர்களால் சூழப்பட்ட ஸ்டீவன்ஸ் இறந்ததாகக் கூறினார்.

அவரது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஸ்டீவன்ஸ் மற்றும் டேவ் வான் ஸ்வானன்பெர்க் குடும்பத்துடன் இருந்தன.

இந்த சோகமான சம்பவம் இரு குடும்பங்களுக்கும், அவர்களது நண்பர்கள், Muriwai தன்னார்வ தீயணைப்புப் படையில் உள்ள சக பணியாளர்கள் மற்றும் முரிவாய் சமூகத்திற்கும் பெரும் அடியாக உள்ளது

மற்றவர்களைப் பாதுகாக்கும் போது அவசரகால சேவைகள் எதிர்கொள்ளும் அபாயங்களின் மோசமான நினைவூட்டல் இது என கிரிகோரி கூறினார்.

அவர்கள் இருவருக்காகவும் துக்கம் அனுசரிக்கும்போது, ​​அவர்களைப் பெருமையுடன் நினைத்துக் கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.