Tairāwhiti இல் 400 பேரும்‌ Hawke's Bay இல் 1900 பேரும் அனர்த்த மையங்களில் தங்கியிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

கேப்ரியல் சூறாவளியால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், பல வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் East Coast பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை அமைச்சருமான கிரி ஆலன் கூறுகையில்...

மக்கள் அனர்த்த மையங்களில் இருந்து வீட்டிற்கு செல்ல எவ்வளவு காலம் எடுக்கும் என்பது நிச்சயமற்றது என்றார்.

நலன்புரி நிலையங்கள் குறுகிய கால அவசரகால வீடுகளை வழங்குவதற்கு வேலை செய்கின்றன, என்று அவர் கூறினார்.

இதனிடையே தகவல்தொடர்புகளை மீட்டெடுத்து இயக்குவது உடனடி முன்னுரிமை என்று அவர் கூறினார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புறங்களில் ஆய்வு செய்து, மக்களுக்கு அவசர மருத்துவப் பொருட்கள் கிடைப்பது மற்றும் ஆதரவு தேவைப்படும் அனைவரையும் அடையாளம் காண்பதே இப்போது முக்கிய கவலையாக உள்ளது என்றார்.