ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நீர் தீர்ந்துவிடும் என்ற அச்சத்தில், கிஸ்போர்னின் மேயர் ரெஹெட் ஸ்டோல்ட்ஸ் குடியிருப்பாளர்களிடம் தண்ணீர் பயன்பாட்டைக் கடுமையாகக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அங்கு தகவல்தொடர்புகள் செயலிழந்த நிலையில் "அவசர" செய்தி வருகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தொலைபேசி இணைப்புகள் எப்போது திரும்பப் பெறப்படும் என்று கேட்டதற்கு, அது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று ரெஹெட் ஸ்டோல்ட்ஸ் கூறினார்.

இந்நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில்...

நியூசிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாமல், நமது சமூகத்தில் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகரமான தாக்கத்தை இன்று நாம் காணலாம்.

கிஸ்போர்னின் வடக்கு மற்றும் தெற்கே துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை சரிசெய்ய வேலை செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

சில தற்காலிக செயற்கைக்கோள் இணைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன, இது மக்கள் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்த மற்றும் குறுஞ்செய்தியை அனுப்ப பயன்படுத்தலாம், ஆனால் இணையத்தைப் பயன்படுத்த முடியாது என அவர் கூறினார்.

எதையும் விட இது சிறந்தது - மக்கள் தாங்கள் நலமாக இருக்கிறார்கள் என்பதை குறைந்தபட்சம் தங்கள் குடும்பங்களுக்கு தெரியப்படுத்துவது ஆகும் என அவர் தெரிவித்தார்.

மாநில நெடுஞ்சாலை 2 வழியாக இன்று இருபது லாரிகள் நகரத்திற்கு வந்தன, உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளைக் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

நாளை கடற்படையின் HMNZS Manawanui கப்பல் வருகை தரும்.

ஆனால் இப்போதைக்கு, குடிநீர் நிலைமை "மிகவும் இறுக்கமாக" உள்ளது என ஸ்டோல்ட்ஸ் கூறினார்.

எங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தேவையான நீர் உள்ளது. நாங்கள் Waipawa நீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கினோம், அது தொடங்க சில நாட்கள் ஆகும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு நாங்கள் அதைத் தொடங்கினோம் என்று நினைக்கிறேன், அதனால் அங்கு கொஞ்சம் தண்ணீர் தான் உள்ளது, எனவே நாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் அளவை விட கால் பகுதி அளவு நீரை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

தயவுசெய்து கிஸ்போர்னில் தண்ணீரை அவசரமாக சேமிக்கவும், இல்லையெனில் எங்கள் குழாய்கள் வறண்டு போகும் என அவர் தெரிவித்தார்.