கடுமையான இடியுடன் கூடிய மழை வடகிழக்கு நோக்கி நகர்கிறது மற்றும் Bay of Plenty, Rotorua, Taupō, Gisborne மற்றும் Hawke's Bay, ஆகிய இடங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.

Rotorua, Waiotapu, Waikite Valley, Waireka மற்றும் Guthrie ஆகிய பகுதிகளை சுற்றிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான இடியுடன் கூடிய மழை இன்று இரவு 10 மணி வரை இருக்கும்.

இதனிடையே Bay of Plenty, Rotorua, eastern Taupo, Hawke's Bay மற்றும் Gisborne எல்லைகள் மற்றும் Tolaga Bay‌ வடக்கே Gisborne ஆகிய பகுதிகளில் மணிக்கு 25 முதல் 40 மிமீ மழை பெய்யும் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று MetService தெரிவித்துள்ளது.

இந்த தீவிர மழையானது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.