Napier இல் இரண்டு வாரங்களுக்கு மின்வெட்டு தொடரலாம் என ஒரு லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hawke's Bay முழுவதும் மின்சாரம் இல்லாத சுமார் 40,000 வீடுகள் மற்றும் கிட்டத்தட்ட 32,000 வீடுகள் நேப்பியர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளதாக கூறப்படுகிறது.

Hawke's Bay Civil Defense Controller Ian Macdonald ஒரு ஊடக சந்திப்பில் Redclyffe துணை மின்நிலையத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இன்று காலை பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருந்தது, தற்போது சுமார் 90,000 வீடுகள் மற்றும் வணிக நிலையங்களுக்கு மட்டுமே மின்சார விநியோகம் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த வியாழன் கிழமைக்கு முன்னர் இப்பகுதி முழுவதும் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்படாது என அவர் மதிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் படிப்படியாக மீட்டமைக்கப்பட்டு வருவதாக யூனிசன் கூறினார்.

இதனிடையே சூப்பர் மார்க்கெட், ஹெல்த் சென்டர் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அவசர மின் விநியோகத்தை வழங்க புத்திசாலித்தனமான ஒரு சுவிட்சை வடிவமைத்த யுனிசன் தொழில்நுட்ப வல்லுநர்களை அவர் பாராட்டினார்.

இதனிடையே North Island இன் ஏனைய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

மேல் North Island இல் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.

இதற்கிடையில், ஆக்லாந்தில் 16,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.

Dargaville போன்ற நகரங்களில் மின்சாரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது, ஆனால் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு மின் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின் உற்பத்தி நிறுவனங்கள் இன்றும் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.