இன்று இரவு North Island இன் கீழ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் அதை உணர்ந்ததாக கூறப்படுகிறது.

இரவு 7.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் Paraparaumu வில் இருந்து வடமேற்கே 50 கி.மீட்டர் தொலைவில் 57 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜியோனெட்டின் அறிக்கை தெரிவிக்கிறது.

15 நிமிடங்களுக்குள், 31000 க்கும் மேற்பட்ட மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாக ஜியோநெட்டில் தெரிவித்தனர்.