கேப்ரியல் சூறாவளியிலிருந்து மீட்பு முயற்சிகளுக்காக விவசாயிகள், மாவோரி உரிமையாளர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு ஆரம்ப நிதி தொகை 4 மில்லியன் டொலர்களை விவசாய அமைச்சர் டேமியன் ஓ'கானர் அறிவித்துள்ளார்.

ஒரு அறிக்கையில், விவசாய அமைச்சர் டேமியன் ஓ'கானர் கூறுகையில் "பால் சேகரிப்பு சீர்குலைந்துள்ள நிலையில், வட தீவின் பெரும்பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி பழத்தோட்டங்கள் மற்றும் கால்நடை இழப்புகளால்" புயலின் தாக்கத்தை கையாள்பவர்களுக்கு இந்த நிதி உதவும் என்று கூறினார்.

சேதம் பற்றிய முழுமையான மதிப்பீடு முடிந்த பிறகு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

அந்த மதிப்பீட்டில் வெள்ளம் சூழ்ந்த பண்ணைகள் மற்றும் பழத்தோட்டங்கள், முக்கிய சாலை மற்றும் மின்சார உள்கட்டமைப்புக்கு சேதம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்கள் ஆகியவை அடங்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உணவு மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட உடனடி சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஓ'கானர் கூறினார்.

மேலும் பயிர் சேதம், கால்நடை இழப்புகள் மற்றும் இடையூறுகளின் முழு அளவை மதிப்பிடுவதை தற்போதைய நிலைமைகள் தொடர்ந்து கடினமாக்குகின்றன என அவர் தெரிவித்தார்.