கேப்ரியல் சூறாவளி காரணமாக வரவுள்ள கனமழை எதிர்பார்த்ததை விட சற்று முன்னதாகவே Northland இற்கு வரக்கூடும் என MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.

Northland, ஆக்லாந்து வடக்கே உள்ள Whangaparaoa மற்றும் Great Barrier Island உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கடுமையான காற்று மற்றும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு மேல் North Island இல் தீவிர வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வடக்கே, Norfolk Island இற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டல கேப்ரியல் சூறாவளி Norfolk Island ல நோக்கி நேராக தொடர்ந்து வருவதால், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த தீவை பலத்த காற்று தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Emergency Management Norfolk Island (EMNI) சனிக்கிழமை பிற்பகல் இந்த தீவை சிவப்பு எச்சரிக்கைக்கு மாற்றியது, அதாவது மக்கள் மறு அறிவிப்பு வரும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வடக்கில் பலத்த காற்று ஏற்கனவே உணரப்பட்டு வருகிறது, ஆக்லாந்து துறைமுக பாலத்திற்கு இன்று பிற்பகல் Waka Kotahi பலத்த காற்றை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Coromandel Peninsula மற்றும் Tolaga Bay இன் வடக்கே Tairawhiti Gisborne ஆகிய பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை பெரும்பாலான பகுதிகளில் 400 மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக MetService கூறுகிறது.

Coromandel இன் குடிமைத் தற்காப்புக் கட்டுப்பாட்டாளர் கேரி டவ்லர் கூறுகையில், கனமழை மற்றும் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவித்தார்.

இன்று பிற்பகலில் மொபைல் எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கைகள் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

பலத்த காற்று, கனமழை மற்றும் பெருங்கடல் சீற்றம் ஏற்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

புயல் கடுமையான வானிலையைக் கொண்டுவரும் என்று MetService வானிலை ஆய்வாளர் லூயிஸ் பெர்ரிஸ் கூறினார்.