"Battle of the Hoods" என்று பெயரிடப்பட்ட தெரு சண்டை நிகழ்வு ஹமில்டனில் இன்று நடைபெறும் என குறிப்பிடப்பட்ட போஸ்டர் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த தெரு சண்டை இன்று பிற்பகல் ஹமில்டன் பேருந்து டிபோவில் நடைபெறும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில்
அந்நிகழ்வு இன்று நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பஸ் நிலையத்தில் பொலிஸார் பிரசன்னம் இருந்தது மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இருந்தன, ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று சம்பவ இடத்தில் செய்தியாளர் கூறினார்.

இதன்படி இன்று மதியம் ஹமில்டனில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.