South Island முழுவதும் சட்டவிரோத கும்பல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் Tribesmen கும்பலை சேர்ந்த 06 உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 15 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இரத்து செய்யப்பட்ட‌ 15 வாகன உரிமங்களை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு வாகனம் ஓட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளும் இந்த 06 பேர் மீது சுமத்தப்பட்டுள்ளது.