மேற்கு ஆக்லாந்தில் ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து Glen Eden, Glenview சாலைக்கு அருகில் காலை 9.23 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை பயணிகள் தாமதத்தை எதிர்பார்க்குமாறும், முடிந்தால் அப்பகுதியை தவிர்க்குமாறும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தினர்.