Southland இல் பிரபலமான மோட்டார் சைக்கிள் பந்தய நிகழ்வின் ஒரு பகுதியாக மலை ஏறும் போட்டியின் போது ஐந்து பேர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Bluff இல் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

காயமடைந்த ஐந்து பேரும் Southland மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் பார்வையாளர் என கூறப்படுகிறது.

தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறும் இந்த நிகழ்வுக்காக சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் Invercargill மற்றும் Bluff இல் இருந்து வருகை தந்தனர்.

என்ன நடந்தது என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.