கனமழையால் ஆக்லாந்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால், கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 27 ஆம் திகதி அன்று அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆக்லாந்து மேயர் வெய்ன் பிரவுன், கேப்ரியல் சூறாவளியுடன் தொடர்புடைய ஆபத்து காரணமாக ஆக்லாந்து பிராந்தியத்தின் அவசரகால நிலையை இன்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளார்.

இதனிடையே தற்போது ஆக்லாந்து மக்களை ஆதரிப்பதற்கு அவசரகால அதிகாரங்கள் இன்னும் தேவை என்று பிரவுனுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாலை 4 மணிக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் மேயர் தற்போது அவசரகால நிலையை நீட்டித்துள்ளார்.