வெப்பமண்டல சூறாவளியான Gabrielle நியூசிலாந்தை நெருங்கி வருவதால் MetService தனது முதல் அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைகள் மேல் North Island ஐ உள்ளடக்கியது.

Whangaparāoa வின் வடக்கே ஆக்லாந்து வடக்குப் பகுதி மற்றும் Northland இல் மஞ்சள் எச்சரிக்கை அமுலில் உள்ளது.

இது ஞாயிறு நள்ளிரவு 1 மணி முதல் செவ்வாய் நள்ளிரவு வரை 71 மணி நேரம் இருக்கும்.

அங்கு 24 மணி நேரத்தில் 150-200 மிமீ மழை பொழியும். வரும் நாட்களில் ஆரஞ்சு அல்லது சிவப்பு எச்சரிக்கை அமுல்படுத்தப்படலாம் என்று MetService தெரிவித்துள்ளது.

Coromandel Peninsula வில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் செவ்வாய் நள்ளிரவு வரை 62 மணிநேரத்திற்கு மஞ்சள் கனமழை எச்சரிக்கை உள்ளது.

அங்கு 24 மணி நேரத்தில் 200-300 மிமீ மழை பொழியும்.

மேலும் வரும் நாட்களில் ஆரஞ்சு அல்லது சிவப்பு எச்சரிக்கை அமுல்படுத்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆக்லாந்து மற்றும் Coromandel Peninsula வில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய் நள்ளிரவு வரை 42 மணி நேரம் பலத்த காற்று வீசும் என MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.