Napier இல் உள்ள Hawke's Bay எக்ஸ்பிரஸ்வேயில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

இந்தச் சம்பவம் மதியம் 1 மணியளவில் Meeanee சாலை வளைவுக்கு அருகில் நடந்தது.

இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்திருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.