நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் கான்பெராவில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே கூட்டாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர்.

இரு தலைவர்களும் இன்று மதியம் இரு நாட்டு செய்தியாளர்களிடம் பேசினர்.

கான்பெராவில் உள்ள பார்லிமென்ட் இல்லத்திற்கு ஹிப்கின்ஸை வரவேற்பது அருமையாக இருந்தது என்று அல்பானீஸ் கூறினார்.

நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் குடும்பம். இன்று நாங்கள் மிகவும் சூடான மதிய உணவை சாப்பிட்டோம், எங்கள் அறிமுகத்தை புதுப்பித்துக்கொண்டோம்.
 
பொருளாதாரம், காலநிலை, பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுடன் கடந்த ஆண்டு நடைபெற்ற தலைவர்கள் கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திட்டத்தைத் தொடர நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து விரிவான விவாதம் இன்று நடைபெற்றது. 

ஆஸ்திரேலியர்கள் மற்றும் நியூசிலாந்து நாட்டினருக்கான குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளை இந்த ஆண்டு அன்சாக் தினத்திற்கு முன் முடிக்க உத்தேசித்துள்ளோம்.

நியூசிலாந்தில் உள்ள எங்கள் நண்பர்களுடனான எங்கள் உறவை மேலும் மேம்படுத்த நான் எதிர்நோக்குகிறேன்.பிரதமரின் இன்றைய வருகைக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன் என பிரதமர் அல்பானீஸ் கூறினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்திற்கு நெருங்கிய நண்பர் அல்லது பங்குதாரர் வேறு யாரும் இல்லை என்று ஹிப்கின்ஸ் கூறினார்.

மேலும் இரு நாடுகளும் நண்பர்கள் என்பதை விட நாங்கள் குடும்பம் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்..

மிகப்பெரிய டிரான்ஸ்-டாஸ்மன் பாரம்பரியத்தில், எங்கள் இரு நாடுகளுக்கும் முக்கியமான பல்வேறு பிரச்சனைகளில் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்

கொவிட் -19 க்குப் பிறகு உலகளாவிய பொருளாதார நிலைமைகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் அவர்கள் விவாதித்ததாக அவர் கூறினார்.

இதனிடையே பிரதமர் ஹிப்கின்ஸ் இன்று மாலை நியூசிலாந்து திரும்புகிறார்.