நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 8882 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ஜனவரி 30 திங்கள் முதல் பெப்ரவரி 05 ஞாயிறு வரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களில் 18 பேர் ஆண்கள் மற்றும் 08 பேர் பெண்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை (05) நள்ளிரவு நிலவரப்படி தீவிர சிகிச்சை பிரிவில் 07 பேர் உட்பட 161 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.