நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை இன்று ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் சந்தித்தார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற முற்றத்தில் இரு நாட்டின் தலைவர்களும் முதல் முறையாக சந்தித்தனர்.

"உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி... இது ஒரு நல்ல நாள்." என பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆஸ்திரேலிய பிரதமரை புன்னகைத்த முகத்துடன் வாழ்த்தினார்.

பிரதமர் அல்பானீஸ் ஹிப்கின்ஸை வரவேற்று, அவரது விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திடச் சொன்னார்.

கான்பெராவில் பிரதமர் ஹிப்கின்ஸ் பாரம்பரிய புகை விழாவுடன் வரவேற்கப்பட்டார்.

இந்நிலையில் இருவரும் தனியாக கலந்துரையாட உள்ள நிலையில் இந்த கலந்துரையாடலின் பின்னர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகைகளின் ஊடக சந்திப்பில் அவர்கள் இருவரும் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.