Lகுழந்தை பராமரிப்பு ஊழியர்களால் குழந்தைகள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக Oranga Tamariki (OT) அறிக்கை வெளியிட்டுள்ளது.

பணியாளர்கள் குழந்தைகள் மீது பலத்துடன் எதிர்வினையாற்றி உள்ளனர். மேலும் கட்டுப்பாடுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

OT ஊழியர்களின் பயிற்சியை அதிகரித்தபோதும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே 2022 ஆம் ஆண்டில், உடல், உணர்ச்சி மற்றும் பாலியல் பாதிப்புகள், பராமரிப்பில் குழந்தைகள் புறக்கணிப்பு சம்பவங்கள் சிறிது குறைந்துள்ளதாக OT கூறுகிறது.

இதன்படி 453 குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் 711 சம்பவங்களில்  உடல், உணர்ச்சி, பாலியல் பாதிப்புகள் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 2021 இல் 486 குழந்தைகள் 742 சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2021 அறிக்கையானது, ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் பாணி மூன்று வருடங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. ஆனால் 2022 அறிக்கை குழந்தைகள் மீதான உடல்ரீதியான தீங்கு இன்னும் நிகழ்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஊழியர்களால் எந்த இடத்தில் தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று OT அறிக்கை கூறியது.

2021-22 ஆம் ஆண்டில் குழந்தைகள் பராமரிப்பில் இருக்கும் ஒரு குழந்தைக்கு ஊழியர்களால் உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் சற்று அதிகரித்துள்ளன‌. இதன்படி 354 நிகழ்வுகளில் 275 குழந்தைகள், பெரும்பாலும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குழந்தை அல்லது இளைஞர்கள் கருவிகளால் தாக்கப்பட்டால் காயங்கள் ஏற்பட்டன.

பராமரிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒரு முறை காயமடைந்தனர், ஆனால் 10-ல் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் சற்று குறைந்துள்ளது (214 நிகழ்வுகள்), பாலியல் துஷ்பிரயோகம் (99) அதிகரித்துள்ளது. மற்றும் புறக்கணிப்பு எல்லாவற்றிலும் மிகக் குறைவு, 2021 ஆம் ஆண்டு 58 இல் இருந்து கடந்த ஆண்டு 44 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பில் சரிவுகள் இருந்தாலும் எந்தவொரு குழந்தைக்கும் தீங்கு விளைவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் தீங்கு ஏற்படுவதைத் தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யத் தீர்மானித்துள்ளோம் என்று OT தர நடைமுறை மற்றும் அனுபவங்களின் துணைத் தலைமை நிர்வாகி நிகோலெட் டிக்சன் கூறினார்.

தீங்கு குறித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் மதிப்பிடப்பட்டு, பராமரிப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த மதிப்பாய்வு செய்யப்படும்.

ஊழியர்கள் பயிற்சியை மேம்படுத்துவதன் மூலமும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நடத்தை எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதற்கான மேற்பார்வையை வலுப்படுத்துவதன் மூலமும் இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு குழந்தையின் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்தி செய்ய சரியான பராமரிப்புச் சூழலை நாங்கள் உறுதிசெய்வது, நாங்கள் செய்துகொண்டிருக்கும் பணிக்கான முன்னுரிமைப் பகுதியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.