North Island ஐ தாக்கிய வெள்ளம், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகத்தை பாதிக்கும் என்று தொழில்துறை தலைவர் கூறுகிறார்.

United Fresh New Zealand இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்...

North Island முழுவதும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளம் உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்பதால், வரும் வாரங்களில் புதிய காய்கறிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிக மழைப்பொழிவு பல பயிர்களின் தரத்தை பாதிக்கும் என United Fresh Food Safety பிரதிநிதி, அன்னே-மேரி ஆர்ட்ஸ் கூறுகிறார்.

வெள்ளம் புதிய தயாரிப்புகளை நுண்ணுயிர் அபாயத்திற்கு உட்படுத்தும். மற்றும் பயிர்களுடன் வெள்ள நீர் கலந்தால், அது மாசுபட்டதாகக் கருதப்படுகிறது மற்றும் அவை அறுவடைக்கு உகந்தது அல்ல என்று அவர் கூறுகிறார்.

வெள்ளம் தணிந்த பிறகு, விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை அறுவடை செய்ய மாட்டார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு நெறிமுறைகளைக் கொண்டிருப்பார்கள்.

நிலத்தை மீண்டும் நடவு செய்வதற்கு சிறிது காலம் ஆகும். 

இந்த தாமதங்கள் சில நேரங்களில் விநியோக இடைவெளிகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆர்ட்ஸ் தெரிவித்தார்.

நுண்ணுயிர் சோதனை மூலம் பயிர்கள் உண்பதற்கு பாதுகாப்பானதாக அறிவிக்கப்படும் வரை அவை தனிமைப்படுத்தப்படும்.

வீட்டுத் தோட்டம் உள்ளவர்கள் அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அது வணிகப் பண்ணையாக இருந்தாலும் சரி, வீட்டுக் காய்கறித் தோட்டமாக இருந்தாலும் சரி, வெள்ள நீர் கலந்த பயிர்கள் உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு ஆபத்தை அளிக்கும் என்று ஆர்ட்ஸ் கூறினார்.

வீட்டுத் தோட்டம் உள்ள எவருக்கும் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக தூக்கி எறியுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று அவர் கூறுகிறார்.

கடுமையான வானிலை ஏற்கனவே நாடு முழுவதும் புதிய காய்கறிகளின் விநியோகம் மற்றும் விலையை பாதித்துள்ளது.

விவசாயிகள் தாங்கள் வழங்கும் காய்கறிகள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்ய கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த வெள்ளம் எங்கள் விநியோக நிலைமையை மோசமாக்கும் அதே வேளையில், வரும் மாதங்களில் சந்தைக்கு போதுமான புதிய காய்கறிகளைப் வழங்க முழுத் தொழில்துறையும் கடுமையாக உழைக்கும் என்கிறார் ஆர்ட்ஸ்.