ஆக்லாந்தின் North Shore இல் உள்ள Wairau Valley வில் வெள்ளத்தால் சேதமடைந்த கடையை கொள்ளையடித்ததாகக் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

57 வயதான நபர் ஒரு வேப் கடையில் இருந்து பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல், பல Tāmaki Makaurau குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் வெள்ள நீர் மற்றும் நிலச்சரிவு போன்ற புயல் அபாயங்களிலிருந்து பாதுகாப்பிற்காக குறுகிய நேரத்தில் சொத்துக்களை விட்டு விரைவாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பொலீஸ் சூப்பிரண்ட் ஷனன் கிரே இது தொடர்பில் கூறுகையில்...

நகரம் முழுவதும் பொலிஸார் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார்.

மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் வணிக உரிமையாளர் விரைவாக தகவல் வழங்கதன் காரணமாக வேப் கடையில் குற்றவாளியை பிடிக்க முடிந்தது என்று அவர் கூறினார்.

நிஜமாகவே இது ஏமாற்றமாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களை சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எனவே சந்தேகத்திற்கிடமான எதையும் நீங்கள் கண்டால் தயவு செய்து உடனடியாக 111 ஐ அழைக்கவும்.

ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் மூலம் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 105 க்கு அழைக்கவும்.

புயலால் மக்கள் உடனடி ஆபத்தில் இருந்தால், அவர்கள் விரைவாக வெளியேறி பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று கிரே கூறினார்.

ஆனால் விலைமதிப்பற்ற பொருட்களில் சிலவற்றை அகற்ற உங்களுக்கு நேரம் இருந்தால் அதை செய்ய ஊக்குவிக்கப்படுவீர்கள் என அவர் தெரிவித்தார்.