நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு, 'ஓ மை கோஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 30-
திகதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.