பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் சிலர் சொர்க்கவாசிகளாகவும், சிலர் நரகவாசிகளாகவும் இருக்கிறார்கள். நரகவாசியாக இருந்த தனலட்சுமியும், ஏ.டி.கே.வும் சொர்க்க வாசிகளாகிவிட்டார்கள்.

இந்நிலையில் ஏ.டி.கே.வை மீண்டும் நரகவாசியாக்க வேண்டும் என்று அசீம் தெரிவித்திருக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ப்ரொமோ வீடியோவில் அசீம் கூறியிருப்பதாவது, ஏ.டி.கே. அவர்களை வந்து திருப்பியும் நரகவாசியாக இழுக்கலாம் என்று இருக்கோம் என்றார்.

அதை கேட்ட மணிகண்டனோ, கதிரை வந்து சொர்க்கத்துக்கு எடுக்கலாம் என்று கூறினார்.

ஷிவினும், அசீமும் ஒரு பாயிண்ட் சொன்னாங்க, ஏ.டி.கே.வுக்கு எமோஷனல் ஸ்டெபிலிட்டி இல்லை என்றார் விக்ரம்.

அடேங்கப்பா, அசீம் சொல்லும் பாயிண்ட்டை எல்லாம் பிக் பாஸிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு விக்ரமன் நல்லவராகிவிட்டாரா என்று பார்வையாளர்கள் வியக்கிறார்கள்.

ஷிவின் சிரிக்கவே, சிரிச்சீங்கனா அசிங்கமா கேட்டுவிடுவேன் என்று பொங்கினார் ஏ.டி.கே.

அதை கேட்டு அசீம் வழக்கம் போன்று கத்தினார்.

ஹலோ நீங்கள் சும்மா சீன் கிரியேட் பண்ணாதீங்க அடங்குங்க என்றதும் அசீமுக்கு மேலும் கோபம் வந்துவிட்டது.

அடங்கு, கிடங்கு என்று எல்லாம் நீங்கள் சொல்லாதீங்க சரியா என்றார். என்னானு ஏ.டி.கே. பாய கூல் கூல்னு அவரை சமாதானம் செய்து வைத்தார் விக்ரமன்.

சீன் போட வேண்டாம் என்று ஏ.டி.கே. அசீமை சொன்னதும் விக்ரமனுக்கு ஒரே சிரிப்பு தான்.

விக்ரமனுக்கு அசீமை சுத்தமாக பிடிக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தான் அசீம் டென்ஷனாகி கத்து கத்துனு கத்த அதை பார்த்து சிரிக்கிறார் விக்ரமன் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் மேலும் கூறியிருப்பதாவது, இதுவே அசீம் மட்டும் அடங்குனு சொல்லியிருந்தால் பூமர் அங்கிள் விக்ரமன் கொந்தளித்திருப்பார்.

யோவ், ஊர்க்கிழவி சும்மா கத்தாதீர். இந்த வாரம் நீங்கள் இல்லை மணிகண்டன் தான் போகப் போகிறார்.

அதனால் பயத்தில் கத்திக் கொண்டே இருக்க வேண்டாம். அசீம் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார். இனி சம்பவமாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.

இன்று அசீமுக்கு பிறந்தநாள். அதனால் அவரின் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிறந்தநாளும் அதுவுமாக அசீமை டென்ஷனாக்கி வேடிக்கை பார்க்கிறார்களே இந்த ஹவுஸ்மேட்ஸ். இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என தெரிவித்துள்ளனர்.