தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதிக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. 

இதுவரை உடல் எடையை குறைக்காமல் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே நடித்து வந்தார்.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை.

இந்நிலையில் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கிறார்.

இளமையாகவும் தெரிகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியமாகி வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

விஜய்சேதுபதி நடித்த டி.எஸ்.பி. படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது விடுதலை, இந்தியில் ஜவான், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்.