இந்த வாரம் பிக் பாஸ் 6 போட்டியாளர்களை சொர்க்கவாசிகள், நரகவாசிகளாக மாற்றி டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள்.

நரகவாசிகள் சொர்க்கவாசிகளாக முயற்சி செய்து வருகிறார்கள்.

அதற்காக அவர்கள் சில டாஸ்குகளை செய்ய வேண்டியிருக்கிறது.

இது தொடர்பாக சொர்க்கவாசிகளுக்கும், நரகவாசிகளுக்கும் இடையே சண்டையாக இருக்கிறது.

இந்நிலையில் தான் அப்படி ஒரு சண்டை தொடர்பான ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

நேற்று எனக்கு செல்லோ டேப் ஒட்டும்போது தோளில் போட்டீங்க. மேலும் தொடையில் இருந்து கால் வரைக்கும் போட்டீங்க, கைக்கு போட்டீங்க. இப்போ ஏன் அதெல்லாம் ஜனனிக்கு போடவில்லை என்று அமுதவாணனிடம் கோபமாக கேட்டார் மைனா நந்தினி.

தோள்பட்டையில் டேப் போடவில்லை, கைக்கு தான் போட்டேன் என்று அமுதவாணன் பதில் அளித்தார்.

இப்போ ஏன் அவருக்கு டேப் போடவில்லை என்று மைனா நந்தினி கேட்க, அவருக்கு அதுவே போதும் என்று விட்டுவிட்டேன் என்று கூலாக பதில் அளித்தார் அமுதவாணன்.

அதை எப்படி நீ முடிவு செய்வ என்று மைனா சீற, நான் முடிவு பண்ணுவேன் என அமுதவாணன் கூறினார். அதை கேட்டு மைனா நந்தினிக்கு மேலும் கோபம் வந்தது.

நான் முடிவு பண்ணுவேன் என அமுதவாணன் மீண்டும் கூற, தெரியுது, தெரியுது என மைனா பதில் அளிக்க அமுதுவுக்கு கோபம் வந்துவிட்டது.

கை தட்டுவது, ஆக்ஷன் பண்ணுவது எல்லாம் வேண்டாம், நார்மலா பேசு என்றார் அமுதவாணன். கெளம்பு கெளம்புனு அமுதவாணனை விரட்டிவிட்டார் மைனா.

பதிலுக்கு அவரோ நீ கெளம்பு என்றார். அத்துடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

அமுதவாணனும், ஜனனியும் நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜனனிக்காக ஃபேவரிட்டிசம் பார்த்து தற்போது ஹவுஸ்மேட்ஸிடம் சிக்கியிருக்கிறார்.

அமுதவாணன் செய்வது தவறு என்று இதை தானே நேற்று அசீமும் கேட்டார். அவரை திட்டினாங்களே என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ஜனனிக்கு ஃப்ரீ நாமினேஷன் கிடைக்க வழிவகை செய்கிறார் அமுதவாணன். இதை தான் நேற்று அசீம் சொன்னதற்கு விக்ரமனும், ஏடிகேவும் அமுதவாணனுக்கு சப்போர்ட் செய்தார்கள்.

தண்டனை என்று வரும்போது அனைவருக்கும் தான் டேப் போட வேண்டும். அதில் என்ன பாகுபாடு என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமுதவாணனை பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது. அவரை முதலில் வெளியே அனுப்புங்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.