FIFA கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்று வரும் கத்தாரில் அடுத்தடுத்து பத்திரிக்கையாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.
 
இதனிடையே 3 செய்தியாளர்கள் தீடீரென உயிரிழந்தமை சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கிராண்ட் வாஹ்ல் என்பவர் கத்தாரில் உலகக்கோப்பை செய்திகளை சேகரித்து வந்தார். இவர் திடீரென கடந்த டிசம்பர் 10ம் திகதி மைதானத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து போராடியும் காப்பாற்ற முடியவில்லை.

இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது. கத்தார் நாட்டை சேர்ந்த கலித் அல் மிஸ்லாம் என்ற புகைப்பட செய்தியாளர் போட்டி குறித்த புகைப்படங்களை சேகரித்து வந்தார். அப்போது அவரும் திடீரென மூச்சு விட சிரமப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரை விட்டார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் ஒரு பத்திரிகையாளர் மரணமடைந்துள்ளார்.

65 வயதாகும் முன்னணி செய்தியாளரான ரோஜர் பேர்ஸ், தற்போது ஐ டிவியின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். 

கத்தார் உலகக்கோப்பையில் பணியாற்றி வந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுவரை 8 உலகக்கோப்பைகளில் பணியாற்றியுள்ள அவர் இன்னும் 5 நாட்களில் ஓய்வு பெறவிருந்தார்.

இந்த 3 மரணங்களுக்கு பின் மர்மம் நிலவுவதாக ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதற்கு காரணம் ஓரினச்சேர்க்கை சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்தது தான் எனக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து செய்தியாளர்கள் மரணமடைவது சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட கத்தார் அரசு இது குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.