ஆக்லாந்து நடைபாதையில் பெண் ஒருவரை கடுமையாக தாக்கிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பொலிஸார் தற்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் ஒருவரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில்  Mount Albert இல் உள்ள Waterview நடைபாதையில் இந்த  கடுமையான தாக்குதல் இடம்பெற்றதாக செயல் துப்பறியும் மூத்த சார்ஜென்ட்  Martin Friend கூறினார்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான ஆண் ஒருவரை அடையாளம் காண காவல்துறைக்கு பொதுமக்களின் உதவியை கோருகின்றனர் என Martin கூறினார்.

இந்நிலையில் சந்தேகப்படும்படியான எதையும் அப்பகுதியில் கண்டவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு‌ அவர் கூறினார்.

வரவிருக்கும் நாட்களில் அப்பகுதியில் பொலிஸ் பிரசன்னம் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை பொலிசார் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக Martin மேலும் தெரிவித்தார்.

தகவல் தெரிந்தவர்கள் - அல்லது சிசிடிவி படத்தில் இருக்கும் ஆண் யார் என்று அடையாளம் காணக்கூடியவர்கள் - 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு, 221213/1298 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.