இன்று காலை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றினார்.

அவரது உரைக்கு‌ நாடாளுமன்றத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ஜனாதிபதி தனது உரையில், உக்ரேனுக்கான நியூசிலாந்தின் ஆரம்பகால மற்றும் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்...

"அன்புள்ள நண்பர்களே, உக்ரைனின் சுதந்திரம் மற்றும் நீதிக்கான போராட்டத்தில் நியூசிலாந்து முதல் நாடுகளில் ஒன்றாக இருந்ததற்கு நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

"இந்தப் போரின் தனித்துவமான தார்மீக சவாலை எதிர்கொண்டு ஆக்கிரமிப்பைத் தூண்டுவதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தேசியத் தடைகளை விதித்துள்ளீர்கள்." என தெரிவித்தார்.

பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை புனரமைக்க முடியும், அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அழிக்கப்பட்ட வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாதது போல், அழிக்கப்பட்ட இயற்கையை மீண்டும் உருவாக்க முடியாது," என்று அவர் கூறினார்.

ஆறுகளில் மாசுபாடு, நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் 3 மில்லியன் ஹெக்டேர் காடுகள் போரின் போது அழிக்கப்பட்டன என Zelensky கூறினார்.

சுற்றுச்சூழலை மீட்டெடுக்க நியூசிலாந்தின் ஆதரவைக் கேட்டார்.

போர் முடிவடைந்ததும், புனரமைப்பு முயற்சிகளுக்கு நியூசிலாந்து உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அணுசக்தி மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, போர்க்குற்றவாளிகளை கைது செய்தல், ரஷ்யாவின் போர்க் கைதிகளை விடுவித்தல் மற்றும் நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்புதல், ஐ.நா. சாசனத்தை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் உக்ரைனின் மறுசீரமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய "உலக அமைதியை நோக்கிய படிகளை" நியூசிலாந்து ஆதரிக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார். 

மேலும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை அவர் பாராட்டினார்.

இன்று காலை, உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக மேலும் 3 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.