நியூசிலாந்தில் பணிபுரியும் செவிலியர்கள் உடனடி வதிவிடத்தை பெறவுள்ள நிலையில் குடிவரவு அமைச்சர் மைக்கேல் வுட் இது தொடர்பில் உரையாற்றினார்.

இதன்போது அவர் கூறுகையில்...

செவிலியர்களின் அனைத்து 13 தொழில் குழுக்களுக்கும் முன்பு இல்லாத வதிவிடத்திற்கான தெளிவான பாதையை நாங்கள் வழங்கினோம்.

நாங்கள் இப்போது அதை மேலும் நெறிப்படுத்தியுள்ளோம் மற்றும் எளிமைப்படுத்தியுள்ளோம்.

மற்றும் நியூசிலாந்திற்கு செவிலியர்களை வரவழைக்க இது எங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் செவிலியர்களின் நிலைமையை மதிப்பிடுவது மட்டுமல்லாமல், மற்ற மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட வதிவிடப் பாதையை வழங்கவும்‌ அரசாங்கம் சுகாதாரத் துறையுடன் நெருக்கமாகச் செயற்பட்டதாக வூட் குறிப்பிட்டார்.

"நாங்கள் Green list ஐ தொடங்கியபோது, செவிலியர்கள் மற்றும் midwives இற்கு உலகில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சில அமைப்புகளை நாங்கள் கொண்டிருந்தோம், முந்தைய அரசாங்கத்தின் கீழ் அவர்களில் பலருக்கு இல்லாத குடியிருப்புக்கான பாதையை இரு குழுக்களுக்கும் வழங்குகிறோம்.

மே மாதத்திலிருந்து செவிலியர்கள் அதிக அளவில் வருவதை நாடு கண்டுள்ளது என்றார்.

ஆனால் சமீபத்திய மாதங்களில் திறமையான புலம்பெயர்ந்தோர், குறிப்பாக சுகாதாரத் துறையில் இருந்து, மற்ற நாடுகளில் போட்டியிடும் வேலை சந்தைகளுக்கு ஈர்க்கப்பட்டனர்.

"நேற்று அறிவிக்கப்பட்ட பசுமைப் பட்டியலில் எங்களின் இலக்கு இதனை சரிசெய்தல், புலம்பெயர்ந்தோருக்கு நாங்கள் சர்வதேச அளவில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்தல்" என தெரிவித்தார்.

சமீபத்திய கொள்கை மாற்றம் சுகாதாரத் துறையில் உடனடி பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ததாக அவர் கூறினார்.

சமீபத்திய நடவடிக்கைக்கு பின்னால் அரசாங்கத்தின் நியாயத்தை அமைச்சர் சுருக்கமாகச் சொன்னார்.

இதன்படி "நாங்கள் வெளிநாடுகளில் உள்ள செவிலியர்களுக்கு ஒரு எளிய செய்தியை வழங்குகின்றோம். "நியூசிலாந்துக்கு வாருங்கள்" என‌ தெரிவித்தார்.