கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு ஆக்லாந்தின் Warkworth என்ற இடத்தில் நபர் ஒருவரை கடுமையான தாக்கிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு 11.30 மணியளவில் Falls சாலை மற்றும் Hudson சாலை சந்திப்பில் இடம்பெற்ற குறித்த சம்பவத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

சம்பவ இடத்தில் நபர் ஒருவர் ‌பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 21 வயது இளைஞர் இன்று North Shore மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாங்கள் வேறு யாரையும் தேடவில்லை எனவும் ஆனால் தாக்குதலை நேரில் பார்த்த எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.