Hawke's Bay இல் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Ngamahanga என்ற இடத்தில் உள்ள Taihape-Napier சாலையில் மதியம் 1 மணிக்கு முன்பு இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.