இன்று பிற்பகல் North Island இல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி Waitomo, Taumarunui, Hawke's Bay, Taranaki, Taihape, Whanganui, Manawatu, Tararua மற்றும் Wairarapa ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என MetService தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை புயல்கள் கடுமையாக இருக்கும் என்றும் மணிக்கு 25 முதல் 40 மிமீ வரை மழை பெய்யக்கூடும் என்றும் அது கூறியது.

இந்த மழைப்பொழிவு வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அது எச்சரித்தது.

குறிப்பாக நீரோடைகள், ஆறுகள் அல்லது குறுகிய பள்ளத்தாக்குகள் போன்ற தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக MetService தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் அபாயகரமான நிலைமைகள் குறித்து‌ வாகன சாரதிகள் கவனமாக இருக்க வேண்டும்.

Coromandel பகுதியில் புதன் மற்றும் வியாழன் மதியம் வரை 100-140 மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அதற்குப் பிறகும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை ஆக்லாந்து, நார்த்லேண்ட் மற்றும் Bay of Plenty பகுதிகளிலும் கனமழை பெய்யும் என MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.