இந்தோனேஷியா சுற்றுலா மற்றும் தொழில் முதலீட்டிற்கு உகந்த இடமாக கருதப்படுகிறது.

இங்கு திருமண உறவை தாண்டிய உடலுறவு, பாலியல் வன்கொடுமைகள், லிவ்விங் டூகேதர், கே, லெஸ்பியன் என இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதை அறிந்து ஆட்சியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுபோன்ற சமூக அவலங்களை களையும் நோக்கில், 2019 ஆம் ஆண்டு திருமண உறவைத் தாண்டிய உடலுறவுக்கு தடை விதிக்கும் சட்டம் இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்தது.

ஆனால், அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.

அதன் காரணமாகபோது இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் கிட்டதட்ட மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு, தற்போது இந்த சட்டம் இந்தோனேசியாவில் வெகு சீக்கிரம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த சட்டத்தின்படி மணமானவர்கள் திருமண பந்தத்தை மீறி பிறருடன் உடலுறவு வைத்துக் கொண்டால், அதுகுறித்து அவரது கணவர் அல்லது மனைவி உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இதேபோல், திருமணமாகதவர்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் அதுகுறித்து அவர்களின் பெற்றோர் புகாரளிக்க முடியும்.

அத்துடன் திருமணத்திற்கு முன் ஆண், பெண் இணைந்து ஒன்றாக வாழ்வதையும் (Living Together) இந்தச் சட்டம் தடை செய்கிறது.

மீறுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தோனேசிய குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்படியாக இச்சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.