ஆக்லாந்தில் உள்ள Karaka என்ற இடத்தில் இன்று பிற்பகல் இரண்டு கார்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2.40 மணியளவில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

Blackridge மற்றும் Oira சாலைகளுக்கு இடையில் மூடப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியை தவிர்க்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.