Special Olympics தேசிய கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கத்திற்காக சுமார் 1000 போட்டியாளர்கள் இன்று ஹமில்டனில் கூடியுள்ளனர்.

நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வு, ஐந்து நாட்கள் நடத்தப்படும்.

1968 இல் நிறுவப்பட்ட Special Olympics, அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பாகும்.

தேசிய கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் நீச்சல், கூடைப்பந்து, பவர்-லிஃப்டிங் மற்றும் தடகளம் உள்ளிட்ட 10 விளையாட்டுகளில் ஏழு வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.