விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 7 வாரங்களை கடந்துள்ளது.

இதில் இதுவரை 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இந்த வார வீக்ளி டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். அதன்படி டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சினிமா கதாப்பாத்திரங்களை இமிட்டேட் செய்யும் வகையில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி விக்ரமனுக்கு அந்நியன், ஷிவினுக்கு மாடர்ன் மோகினி, தனலெட்சமிக்கு மோசமணி, மைனா நந்தினிக்கு பூனை சேகர் என கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களாக இருந்து பர்ஃபாமன்ஸ் கொடுக்க வேண்டும். அவர்களின் பர்ஃபாமன்ஸ் பார்த்து ஹவுஸ்மேட்ஸ் அளிக்கும் சன்மானத்தை பொருத்து டாஸ்க்கில் வெற்றி பெற்றவர்கள் குறித்து அறிவிக்கப்படும்.

பிக்பாஸ் வீடு ஆட்டம் பாட்டம் என களைக்கட்ட தொடங்கியிருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

டீம்மாக டாஸ்க் கொடுத்தால் சண்டை போட்டு அந்த டாஸ்க்கை சின்னாபின்னமாக்கி விடுகிறார்கள் ஹவுஸ்மேட்ஸ்.

இதனால் வீட்டின் செட்டப்பை மாற்றி காஸ்ட்யூம் கொடுக்கும் பிக்பாஸ் எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாற்றமடைந்து வருகிறார்.

இந்நிலையில் இண்டிவிட்ஜுவல் டாஸ்க்கை கொடுத்து அவர்களின் திறமைக்கு சவால் விட்டுள்ளார் பிக்பாஸ்.