ஆக்லாந்தில் உள்ள Pukekohe என்ற இடத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி King Street இல் உள்ள மூன்று கடைகளுக்குள் வாகனம் ஒன்று அத்துமீறி நுழைந்தது குறித்து அதிகாலை 2.55 மணிக்கு பொலிஸாருத்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய குறித்த வாகனத்தை காவல்துறையினர்‌ தடுத்து நிறுத்திய போது குற்றவாளிகள் வாகனத்தை நிறுத்தாது சென்றனர்.

பின்னர் அந்த வாகனம் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வாகனம் Paparata சாலையில் உள்ள மரத்தில் மோதியதாக துப்பறியும் மூத்த சார்ஜென்ட் Dave Paea கூறினார்.

இச் சம்பவத்தில் 13 முதல் 16 வயதுடைய 5 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான Papatoetoe என்ற இடத்தில் Dairy Shop ஒன்றில் திருட முயற்சித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 3.10 மணியளவில் Carruth சாலையில் உள்ள Dairy Shop ஒன்றினுள் வாகனம் ஒன்று அத்துமீறி நுழைய முயன்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர், ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை என்று Dave Paea கூறினார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய வாகனம் நிறுத்தத் தவறியதால், அது ஹெலிகாப்டரால் கண்காணிக்கப்பட்டது.

பின்னர் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர் என அவர் தெரிவித்தார்.