கனடாவில், நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகள் பயணித்த கார், இன்னொரு கார்மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தானும் ஒரு குழந்தையும் சிறிய காயங்களோடு தப்பித்துள்ளதாகவும், மற்றுமொரு குழுந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காருக்கு பலத்த சேதமென்றும் நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களது நலனுக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.