நடிகை சமந்தா பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு இந்திய அளவில் முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது சமந்தா நடித்துள்ள யசோதா என்ற படத்தில் அவர் வாடகை தாயாக நடிக்கிறார்.

அதிரடி சண்டையுடன் திகில் கதையம்சத்தில் தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

யசோதா திரைப்பட டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், ஹிந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.