அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி பிறந்த நாய் பெப்பிள்ஸ்.

இதை பாபி - ஜூலி என்ற தம்பதி வளர்த்து வந்தனர்.

உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக 21 வயதான டோபி கெய்த் என்ற நாய் அறிவிக்கப்பட்டபோது, பாபி - ஜூலி தம்பதி தங்களது நாய் அதை விட அதிக வயதுடையது என்பதால், கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக பெப்பிள்ஸ் அறிவிக்கப்பட்டது.

23 வயது ஆவதற்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், பெப்பிள்ஸ் உடல்நலக்குறைவால்  உயிரிழந்தது.

பெப்பிள்ஸ் கிராமிய இசையை விரும்பி ரசித்ததாகவும்,  தங்கள் குடும்பத்தில் மிக செல்லமாக வளர்ந்ததாகவும், அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெப்பிள்ஸ் தன் வாழ்நாளில் 32 குட்டிகளை ஈன்றுள்ளது.