53 ஆண்டுகளுக்கு பின்னர் கிறிஸ்ட்சர்ச்சில் அக்டோபர் மாதத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

வெலிங்டனில் வடக்கே பனிப்பொழிவுகள் பதிவாகியுள்ளன.

ரெமுடகா மலைப்பாதை கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய நார்த் தீவில் உள்ள பாலைவன சாலை மூடப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு நகரின் சில பகுதிகளில் வெப்பநிலை வெறும் 9C ஆக இருந்தது.

நகரின் சில இடங்களில் மழை மற்றும் பலத்த காற்றும், இன்று அதிகபட்சமாக வெப்பநிலை 13C ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நாட்டிலேயே மிகவும் குளிரான இடமாக காணப்பட்டது Te ānau ஆகும், அங்கு வெப்பநிலை -5.1C இருந்தது.

கிறிஸ்ட்சர்சில் வசிப்பவர்கள் ஒரு குளிர்கால அதிசய பூமியில் இன்று விழித்திருக்கிறார்கள்

1969க்குப் பிறகு கிறிஸ்ட்சர்ச் அக்டோபர் பனியைப் பார்ப்பது இதுவே முதல் முறையாகும்.

காலை 6.30 மணிக்கு கார்டன் சிட்டியில் 1.2C வெப்பநிலை இருந்தது.

கிறிஸ்ட்சர்ச்சின் கிழக்குப் பகுதியில் உள்ள கோஃப்ஸ் விரிகுடாவில் வசிக்கும் நபர் ஒருவர், இன்று காலை பனி தொடர்ந்து "மிகவும் கடுமையாக" பெய்து வருவதாகக் கூறினார்.

இன்று கிறிஸ்ட்சர்ச்சில் அதிகபட்சமாக 10C வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது ஆனால் இது இன்று இரவு 1C ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டன்னீடன் வடமேற்கே உள்ள மாநில நெடுஞ்சாலை 87 நேற்றிரவு பனியால் மூடப்பட்டது. 

மாநில நெடுஞ்சாலை 1, டன்னீடனில் இருந்து செல்லும் வடக்கு நெடுஞ்சாலையும் நேற்று இரவு மூடப்பட்டது.

இதனிடையே பல ஆண்டுகளின் பின்னர் கிறிஸ்ட்சர்ச்சில் ஏற்பட்டுள்ள இந்த பனிப்பொழிவு பூமி வெப்பமடைதலின் தாக்கமா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது நம் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் தான் இந்த புவி வெப்பமடைதல்.

பூமி வெப்பமடைதல் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

நன்னீர் பற்றாற்குறை, உணவு உற்பத்தி தட்டுப்பாடு, வெள்ளம், புயல்கள் மற்றும் வெப்ப அலைகளின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் என கூறிக்கொண்டே போகலாம்.

மேலும் புவி மென்மேலும் சூடானால், நீர் நீராவியாவதன் அளவு அதிகரித்து, அதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதன் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும், சில பகுதிகளில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக உருவெடுக்கக் கூடும் என கூறப்படுகிறது.

அதே சமயத்தில், கடற்கரையை ஒட்டி அமையாத பகுதிகளில் கோடைகாலத்தின்போது, வெப்பநிலை அதிகரித்து வறட்சிக்கு வித்திடும் சூழ்நிலை ஏற்படக்கூடும்.

எனவே கிறிஸ்ட்சர்ச்சில் தற்போது பல ஆண்டுகளின் பின்னர் பொழியும் இந்த கடுமையான பனிப்பொழிவிற்கு பூமி வெப்பமடைதலால் ஏற்பட்ட காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம்.