சீனாவில் ஏற்கெனவே கூகுள் தனது சேவையை நிறுத்தியுள்ள நிலையில் (முழுமையாக அல்ல) தற்போது மொழிபெயர்ப்பு சேவையையும் கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு வரை கூகுள் சீனாவில் தனது சேவையை தொடங்கி நடத்தி வந்திருந்தது.

பின்னர் 2010ல் கூகுள் அங்கிருந்து மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டது.

ஹேக்கர்கள் தொல்லையால்தான் இவ்வாறு நடப்பதாக கூகுள் காரணம் கூறியது.

கூகுளையே ஹேக் செய்யும் அளவு அங்கு மென்பொறியாளர்கள் இருப்பதன் காரணமாக கூகுளை விட சிறந்த சீன செயலிகள் கூகுள் வழங்கும் சேவையை வழங்கின

இருந்த நிலையில், தற்போது கூகுள் தனது மொழிபெயர்ப்பு சேவையையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கடந்த 2017ல் சீனாவில் கூகுள் இந்த சேவையை தொடங்கியிருந்தது.

இவ்வாறு இருக்கையில் 'Black Panther' என எழுதினால் 'கருப்பு பாந்தர்' என மொழி பெயர்த்த கூகுளை அந்நாட்டு மக்கள் வைத்து செய்திருக்கிறார்கள்.

இப்போது இந்த மாதிரி மோசமாக இல்லாமல் மொழிபெயர்ப்பை கூகுள் மிகவும் மேம்படுத்தியிருந்தாலும், சீன மக்கள் என்னவோ உள்ளூர் செயலிகளையே பெரிதும் நம்பினர்.

எனவே நுகர்வோர்கள் குறைந்த நிலையில் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம், வட கொரியாவிடம் குட்டு என கூகுள் கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சீனாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது அந்நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.