பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று எஃபெசோ காலின்ஸின் மேயர் தேர்தல் பிரச்சாரத்திற்குப் தனது ஆதரவை வழங்கினார்.

இன்று மதியம் Henderson இல் இடம்பெற்ற காலின்ஸின் பிரச்சாரத்திற்காக தன்னார்வலர்களை பிரதமர் ஆர்டெர்ன் சந்தித்தார்.

அவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினார்.

தொழிற்கட்சி மற்றும் பசுமை கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட காலின்ஸ், பிரதமரின் ஆதரவைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

"எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க பிரதமர் தனது பிஸியான கால அட்டவணையில் நேரத்தை ஒதுக்கியதில் நான் பெருமைப்படுகிறேன்." என தெரிவித்தார்.

பிரதமர் ஆர்டெர்ன் பிரச்சார நிகழ்விற்கு வந்திருந்ததால் தான் "சூப்பர் ஸ்டோக்" ஆனதாக காலின்ஸ் கூறினார்.

இது தனக்கும் தன்னார்வலர்களுக்கும் "அருமையானது" என்று கூறினார்.