Manawatū வில் உள்ள ஒரு பணியிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என கூறப்படுகிறது.

மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்துக்கு தீயணைப்பு பணியாளர்கள் அழைக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் அவசரநிலை NZ கூறுகிறது.

இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒரு ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக St John ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்தது.

இரண்டு பேர் ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வொர்க் சேஃப் நிறுவனம் இச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.