வடகொரியாவின் இன்றைய ஏவுகணை சோதனைக்கு  பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது "சட்டத்திலும் நடைமுறையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்" என்று கூறியுள்ளார்.

வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் ஏவப்பட்ட ஏவுகணை, வடக்கு ஜப்பான் மீது பறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதுபோன்ற நடத்தை "முற்றிலும்" கண்டிக்கப்பட வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.

"வட கொரியாவில் இருந்து வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் சோதனைகள் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம், இதை நாங்கள் தொடர்ந்து கண்டிக்க வேண்டும். இது சர்வதேச விதிகளை மீறுவதாகும்" என்று அவர் கூறினார்.

"இது ஒரு அடையாளம் காணப்பட்ட ஆபத்து, இது நிச்சயமாக ஜப்பானுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது. ஜப்பான் தொடர்ந்து எங்களுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளனர், வடகொரியாவின் இந்த செயல் நியாயமற்றது என்பதை நிரூபிக்க சர்வதேச சமூகமாக நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும்.  முற்றிலும் இது சட்டத்திலும், நடைமுறையிலும்‌ ஏற்றுக்கொள்ள முடியாதது" என பிரதமர் ஆடர்ன் மேலும் தெரிவித்தார்.